ஐபிஎல் 2021: நடப்பு சீசனிலேயே கோலியின் கேப்டன்சி காலி; வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Updated: Thu, Sep 23 2021 18:57 IST
Kohli Can Be Removed As RCB Captain Mid Season (Image Source: Google)

ஐபிஎல் தொடங்கிய 2008லிருந்து ஆர்சிபி அணியில் விளையாடிவரும் விராட் கோலி, 2013ஆம் ஆண்டிலிருந்து அந்த அணியின் கேப்டனாகவும் இருந்துவருகிறார்.

ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்கு ஒருமுறை கூட கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்ற விமர்சனம் விராட் கோலி மீது உள்ளது. 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோஹித் சர்மாவின் கேப்டன்சியுடன் ஒப்பிடப்பட்டு கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட கோலி, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டுவந்தார்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அவரது பேட்டிங்கும் படுமோசமான சரிவை சந்தித்திருக்கிறது. 2 ஆண்டுகளாக படுமோசமான பேட்டிங் ஃபார்மில் இருந்துவரும் கோலி, ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகிறார். 3 விதமான இந்திய அணிகளின் கேப்டன்சி, ஐபிஎல் கேப்டன்சி ஆகிய பணிச்சுமை, சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி கோப்பையை வெல்லவில்லை, ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை ஆகிய விமர்சனங்கள் அவரது பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த விராட் கோலி, இந்த ஐபிஎல் சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

அப்படியே கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தாலும், இந்த சீசன் முடிந்தபின்னர் அறிவித்திருக்கலாம். சீசனின் இடையிலேயே அறிவித்திருக்க வேண்டியதில்லை என்று கம்பீர் உள்ளிட்ட சில முன்னாள் வீரர்கள் கோலியின் முடிவை சாடியிருந்தனர்.

இந்நிலையில், விராட் கோலி இன்னும் ஒரு இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பினால், இந்த சீசனின் இடையிலேயே கேப்டன்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று முன்னாள் வீரர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

தினேஷ் கார்த்திக்(கேகேஆர்), டேவிட் வார்னர்(சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) ஆகிய இருவரும் ஐபிஎல் சீசனின் இடையே கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அதேபோலவே இந்த சீசனின் இடையில் விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை