ஐபிஎல் 2022: குல்தீப் யாதவ் மேம்பட்டு வருகிறார் - ரிக்கி பாண்டியா!
கடந்த மூன்று ஐபிஎல் சீசனாகவே குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட முடியாமல் திணறி வந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்த அவரால் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் இருந்ததால் விளையாடும் லெவனில் இடம்பெற முடியவில்லை. பிறகு, முழங்காலில் காயம் ஏற்பட்டதையடுத்து, கடந்த ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார்.
ஆனால், இதே குல்தீப் யாதவை டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது. அவர் மீது டெல்லி கேபிடல்ஸ் அணி வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. நடப்பு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் 17 விக்கெட்டுன் இரண்டாம் இடத்தில் உள்ளார் குல்தீப் யாதவ்.
அவரைப் பற்றி டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், "ஏலத்தில் அவர் எங்களது முக்கியமான வீரராக இருந்தார். அவருக்கு நாங்கள் நிறைய அன்பையும், கவனத்தையும் கொடுக்கிறோம். அவர் ஒரு அற்புதமான இளம் வீரர். குல்தீப் யாதவ் நேர்மறையான இந்த சூழலில் மேம்பட்டு வருகிறார்” என்று தெரிவித்தார்.