தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (நவம்பர் 27) டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 9 ரன்னில் தனது விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டோனி டி ஸோர்ஸியும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.

Advertisement

பின் 16 ரன்களை எடுத்த கையோடு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய டேவிட் பெட்டிங்ஹாமும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 54 ரன்னிலேயே 4 விக்கெட்டுக்ளை இழந்து தடுமாறியது. அதன்பின் கேப்டன் டெம்பா பவுமாவுடன் இணைந்த கைல் வெர்ரையன் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20.4 ஓவர்கள் முடுவில் 4 விக்கெட்டுகளை இழப்பிற்கு 80 ரன்களைச் சேர்த்த நிலையில், மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியின் முதல்நாள் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் டெம்பா பவுமா 28 ரன்களுடனும், கைல் வெர்ரைன் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News