ஜோஸ் பட்லருக்கு பதில் குசால் மெண்டிஸை தேர்வு செய்யும் குஜராத் டைட்டன்ஸ்?

Updated: Thu, May 15 2025 15:36 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகின்றன. 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதேபோல் இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் மும்பை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஜெய்ப்பூர், அஹ்மதாபாத் நகரங்களில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அனைத்து அணிகளும் எஞ்சிய போட்டிகளுக்காக தீவிர்மாக தயாராகி வருகின்றனர். ஒருபக்கம் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க இருந்தாலும் வெளிநாட்டு வீரர்கள் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பாதுகாப்பு காரணம் மற்றும் சர்வதேச போட்டிகள் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் விளையாடுவார்காளா என்ற சந்தேகங்கள் உள்ளன. இதனால் அணிகள் தற்காலிக வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதிக்கப்பட்டுளனர். 

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் எஞ்சிவுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் இடம்பிடித்துள்ளார். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது மே 29ஆம் தேதி தொடர் ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இதன் காரணமாக ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடருக்கு திரும்பாத பட்சத்தில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் குசால் மெண்டிஸை குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. குசால் மெண்டிஸ் இதுவரை 172 டி20 போட்டிகளில் விளையாடி 4718 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 2 சதங்கள் மற்றும் 32 அரைசதங்களை அடித்துள்ளார்.

Also Read: LIVE Cricket Score

நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிகள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் தற்போது முதலிடத்தில் உள்ளது. அவர்கள் இதுவரை போட்டியில் 11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் மொத்தம் 16 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக, தற்போதைய சூழ்நிலையில், குஜராத் அணி பிளேஆஃப் சுற்றுக்கு எளிதாக தகுதி பெற முடியும். இதுபோன்ற சூழ்நிலையில், குசல் மெண்டிஸ் அணியில் சேர்க்கப்படுவாரா அல்லது ஜோஸ் பட்லர் விளையாடுவாரா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை