லபுசாக்னேவின் பேட்டிங் பாராட்டுக்குறியது - உஸ்மான் கவாஜா!
வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் இறுதியில் ஆஸ்திரேலிய அணி, 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது. இதில் லபுசாக்னே 154, ஸ்மித் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இந்நிலையில் இருவரும் இன்றும் தொடர்ந்து நன்கு விளையாடி இரட்டைச் சதமெடுத்தார்கள். லபுசாக்னே 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 200 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 152.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 598 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 74 ரன்களைச் சேர்த்தது.
இந்நிலையில் மார்னஸ் லபுசாக்னே விளையாடிய விதம் பாராட்டுக்குறியது என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் கவாஜா பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய உஸ்மான் கவாஜா, “மார்னஸ் விளையாடும் விதம் காரணமாக அவர் எப்படி பட்டவர் என்பது தெரியும். அவர் ஒரு அற்புதமான வீரர். அவர் ஒரு கட்டத்தில் ரன்களை சேர்ப்பது பார்க்க நன்றாக இருந்தது. அவர் நேற்றைய போட்டியில் பேட்டிங் செய்தபோது விளையாடி விதம் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவர் கடுமையாக உழைத்து வருகிறார்.
நானும் மார்னஸும் முதல் பாதியில் அதைச் செய்தோம், இரண்டாவது பாதியில் அது கொஞ்சம் எளிதாகிவிட்டது, ஆனால் அவர்கள் இன்னும் ஒப்பீட்டளவில் நன்றாகப் பந்துவீசியிருக்க வேண்டும். பின்னர் வெளிப்படையாக அந்த கடைசி பகுதியில் நான் எனது சதத்தை தவறவிட்டேன், ஆனால் மார்னஸ் சிறப்பாக விளையாடி அதனை சதமாகவும் மற்றினார்” என்று தெரிவித்தார்.