அறிமுக ஆட்டத்தில் அரைசதம் கடந்து சாதனை படைத்த முகமது அப்பாஸ்!

Updated: Sat, Mar 29 2025 13:43 IST
Image Source: Google

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நேப்பியரில் நடைபெற்றது. இப்போட்டியி டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிக் செய்ய அழைத்தது. 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினாலும், மார்க் சார்மேனின் அபாரமான சதத்தின் மூலமாகவும், டேரில் மிட்செல், முகமது அப்பாஸ் ஆகியோரின் அரைசதங்களின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 345 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 132 ரன்களையும், டேரில் மிட்செல் 76 ரன்களிலும், முகமது அப்பாஸ் 52 ரன்களையும் சேர்த்தனர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் உஸ்மான் கான் 39 ரன்களிலும், அப்துல்லா ஷஃபிக் 36 ரன்களிலும், பாபர் ஆசாம் 78 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 30 ரன்களிலும் சல்மான் ஆகா 50 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ரன்களுக்கு ஆல் அவுட்டாந்து. நியூசிலாந்து தரப்பில் நாதன் ஸ்மித் 4 விக்கேட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய மார்க் சாப்மேன் ஆட்டநயாகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய முகமது அப்பாஸ் அரைசதம் கடந்து அசத்தியன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

அதன்படி இப்போட்டியில் முகமது அப்பாஸ் 24 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் குர்னால் பாண்டியா 26 பந்துகளில் அரைசதம் கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது முகமது அப்பாஸ் முறியடித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் (அறிமுக போட்டியில்)

  • 24 பந்துகள் - முகமது அப்பாஸ், நியூசிலாந்து vs பாகிஸ்தான் - 2025
  • 26 பந்துகள் - குர்ணால் பாண்டியா, இந்தியா vs இங்கிலாந்து - 2021
  • 26 பந்துகள் - அலிக் அதானஸ், வெஸ்ட் இண்டீஸ் vs ஐக்கிய அரபு அமீரகம் - 2023
  • 33 பந்துகள் - இஷான் கிஷன், இந்தியா vs இலங்கை - 2021
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை