PSL 2023: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Tue, Feb 14 2023 11:48 IST
Lahore Qalandars got off to a winning start in PSL 2023 after snatching the victory away from Multan (Image Source: Google)

பாகிஸ்தானின் உள்ளூர் டி20 லீக் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இன்று தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய லாகூர கலந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகர் ஸமான் - மிர்ஸா தாஹிர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் மிர்ஸா தாஹிர் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் 19 ரன்களிலும், காம்ரன் குலாம் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.

இதற்கிடையில் மற்றொரு தொடக்க வீரரான ஃபகர் ஸமான் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். பின் 42 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 66 ரன்களைச் சேர்த்த ஃபகர் ஸமான் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய சிக்கந்தர் ரஸா - ஹுசைன் தாலத் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் 20 ரன்களைச் சேர்த்திருந்த ஹுசைன் தாலத் ஆட்டமிழந்தார். இருப்பினும் கடைசி வரை களத்தில் இருந்த சிக்கந்தர் ரஸா 19 ரன்களைச் சேர்த்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. முல்தான் அணி தரப்புல் உசாமா மிர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் - ஷான் மசூத் இணை களமிறங்கினர். இதில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் மசூத் 35 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த முகமது ரிஸ்வான் அரைசதம் கடந்து அசத்தினார்.

அதன்பின் 75 ரன்கள் எடுத்திருந்த முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டேவிட் மில்லர் 25, பொல்லார்ட் 20, குஷ்டில் ஷா 12 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி ஒரு ரன்னில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஃபகர் ஸமான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை