சூர்யகுமார் யாதவை பாராட்டிய ரஷீத் லத்தீப்!

Updated: Wed, Jul 13 2022 22:17 IST
Latif's huge claim on 31-year-old India star (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் மூலம் தன்னை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தி கொண்ட சூர்யகுமார் யாதவ், பல வருட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியிலும் கால் பதித்தார்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினாலும், இந்திய அணிக்காக விளையாடும் போது பல வீரர்கள் சொதப்பியே வருகின்றனர். மிக சில வீரர்களே தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்து கொள்கின்றனர். அதில் சூர்யகுமார் யாதவும் ஒருவர்.

ஐபிஎல் தொடருக்காக விளையாடியதை விட, இந்திய அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ், மிடில் ஆர்டரில் இந்திய அணியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்ந்து வருகிறார்.

ஓரிரு போட்டிகளில் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு போட்டியிலும் குறையே சொல்ல முடியாத அளவிற்கு மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவின் திறமையை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சூர்யகுமார் யாதவ் குறித்து ரசீத் லத்தீப் பேசுகையில், “சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு கிடைத்த மிக சிறந்த வீரர். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என இரண்டிலும் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு கூடுதல் பலத்தை சேர்த்து வருகிறார். அவரது ஆட்டத்தில் ஒரு தனித்துவம் உள்ளது. அவரிடம் இருக்கும் திறமை வியக்க வைக்கிறது, சிக்ஸர்களை அசால்டாக அடிக்கிறார். 

கஷ்டமான திசைகளில் கூட அவரால் இலகுவாக சிக்ஸர் அடிக்க முடிகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இது போன்று திறமையானவர்களை பார்ப்பது அரிது. மேக்ஸ்வெல்லும் இதே போன்ற திறமையை கொண்டவர். அவரது பேட்டிங்கை கணிக்கவே முடியாது. இந்திய அணி அவரை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில், இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் 44 இடங்கள் முன்னேறி 5ஆவது இடத்தை பிடித்துள்ளார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய வீரரும், சூர்யகுமார் யாதவ் தான்.

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு டி20 தொடரில் சதம் அடித்ததன் மூலம், சூர்யகுமார் யாதவால் இந்த உயரத்தை எட்ட முடிந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை