ஓவல்  பேட்டிங் செய்வதற்குச் சொர்க்கமான மைதானம் - தினேஷ் கார்த்திக்!

Updated: Tue, Jun 06 2023 20:46 IST
“Leave out Ashwin and play four pacers” – Dinesh Karthik ahead of WTC final! (Image Source: Google)

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதிப்போட்டி லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நாளை ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. தற்போதைய லண்டன் ஓவல் மைதான ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாகப் புற்கள் நிறைந்ததாகக் காணப்படுகிறது. மேலும் கடைசி நாட்களில் வழக்கமாக இங்கு சுழற் பந்துவீச்சும் எடுபடும்.

இந்த நிலையில் இந்தப் போட்டிக்கு கிரிக்கெட் வர்ணனை செய்ய இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக், இந்தப் போட்டிக்கு எப்படியான இந்திய அணி அமைய வேண்டும்? என்று தனது கருத்தைக் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர்,“அஸ்வினை விட்டுவிட்டு நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும். நான் சவுத்தாம்டனில் அஸ்வின் பந்துவீச்சை ரசித்தேன். ஆனால் பயிற்சியாளர் இதே முடிவில் செல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். உமேஷ் யாதவ் வலைகளில் நன்றாக பந்து வீசினார். அவர் மிகவும் கூர்மையாகவும் உடல் தகுதி உடனும் இருக்கிறார். உமேஷ் உடன் அவர்கள் செல்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

 

ஓவல் மைதானத்தின் பக்கங்கள் முழுவதும் ஆடுகளங்களாக இருக்கிறது. பொதுவாக மைதானத்தில் ஆறு அல்லது ஏழு ஆடுகளங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் ஓவலில் 20, 23 ஆடுகளங்கள் இருக்கிறது. இது பேட்டிங் செய்வதற்குச் சொர்க்கமான மைதானம். மேலும் ஈடன் கார்டன் போல அவுட் ஃபீல்டு வேகமாக இருக்கும்.

இங்கு டாஸ் முக்கியமான காரணியாகும். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசும். முதல் நாளில் வேகப்பந்துவீச்சாளர்களை விட மிதவேகப்பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாக இருக்கும். டாஸ் வெல்லும் அணிக்கு இந்தப் போட்டியில் ஒரு தனித்துவமான நன்மை இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை