ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அதிவேக அரைசதமடித்த வீரர்களின் பட்டியல்!

Updated: Sat, Jun 01 2024 15:32 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் நாளை முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பல சாதனைகளும் முறியடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

அந்தவரிசையில் முதலிடத்தில் இருப்பது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த சாதனை இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் பெயரில் உள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான முதல் உலக டி20 போட்டியில் யுவராஜ் 12 பந்துகளில் அரை சதம் அடித்து இந்த சாதனையை படைத்தார். இந்த அரைசத இன்னிங்ஸின் போது, ​​வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த சாதனையையும் யுவராஜ் சிங் படைத்துள்ளார் 

மேலும் டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் நெதர்லாந்தின் ஸ்டீபன் மைபெர்க் மற்றும் ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் கூட்டாக இரண்டாவது இடத்தில் உள்ளனர். அதன்படி நெதர்லாந்தின் ஸ்டீபன் மைபர்க் 2014 இல் அயர்லாந்துக்கு எதிராகவும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2022 டி20 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராகவும் 17 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளனர்.

 

டி20 உலகக்கோப்பை தொடரில் அதிவேக அரைசதங்கள் அடித்த வீரர்கள்

  • யுவராஜ் சிங் - 12 பந்துகளில் vs இங்கிலாந்து
  • ஸ்டீபன் மைபர்க் - 17 பந்துகளில் vs அயர்லாந்து
  • மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் - 17 பந்துகளில் vs இலங்கை
  • கிளென் மேக்ஸ்வெல் - 18 பந்துகளில் vs பாகிஸ்தான்
  • கேஎல் ராகுல் - 18 பந்துகளில் vs ஸ்காட்லாந்து
  • ஷோயப் மாலிக் - 18 பந்துக்களில் vs ஸ்காட்லாந்து
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை