ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Lucknow Super Giants vs Chennai Super Kings Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 30ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் லக்னோ அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
LSG vs CSK: मैच से जुड़ी जानकारी
- மோதும் அணிகள்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
- இடம் - ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
- நேரம் - ஏப்ரல் 13, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)
LSG vs CSK Pitch Report
ஐபிஎல் 2025 தொடரின் 30ஆவது போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 09 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில், அதில் 4 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது, 5 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 151 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 199 ரன்கள் உள்ளது. இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதால், பேட்டர்களுக்கு பெரும் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
LSG vs CSK: Where to Watch?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.
LSG vs CSK Head To Head Record
- மோதிய போட்டிகள் - 05
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 03
- சென்னை சூப்பர் கிங்ஸ் - 01
- முடிவில்லை - 01
LSG vs CSK Dream11 Team
- விக்கெட் கீப்பர் – நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), டெவன் கான்வே
- பேட்ஸ்மேன்கள் - மிட்செல் மார்ஷ், விஜய் சங்கர், ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் படோனி
- ஆல்-ரவுண்டர் - ஐடன் மார்க்ரம் (துணை கேப்டன்)
- பந்துவீச்சாளர்கள் - ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், நூர் அகமது.
Lucknow Super Giants vs Chennai Super Kings Probable Playing XI
Lucknow Super Giants Probable Playing XI: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், டேவிட் மில்லர், ரிஷப் பந்த் (கேப்டன்), ஆயுஷ் படோனி, ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், அவேஷ் கான், திக்வேஷ் சிங்.
இம்பேக்ட் வீரர் - ரவி பிஷ்னோய்.
Chennai Super Kings Probable Playing XI: ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சிவம் துபே, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது.
இம்பாக்ட் வீரர் - மதீஷ பத்திரன.
LSG vs CSK Dream11 Prediction, LSG vs CSK, LSG vs CSK Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, LSG vs CSK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Lucknow Super Giants vs Chennai Super Kings
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.