ஐபிஎல் 2022: ரன் குவிப்பில் டி காக்-ராகுல் ஜோடி புதிய வரலாறு படைத்தது

Updated: Thu, May 19 2022 12:08 IST
Image Source: Google


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா  அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல் - டி காக் ஜோடி, 20 ஓவர்கள் முழுவதும் விளையாடி 210 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது.

இதன் மூலம் ஒட்டு மொத்தமாக ஐபிஎல் தொடரில் தொடக்க விக்கெட் பாட்னர்ஷிப்-க்கு அதிக ரன்கள் குவித்த ஜோடிகள் பட்டியலில் ராகுல் - டி காக் இணை முதல் இடத்தில் உள்ளது.

இதற்குமுன் 2019 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் (ஹைதராபாத் அணி ) கூட்டணி 185 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ராகுல் - டி காக் இணை முறியடித்துள்ளது. 

இதேபோல் கொல்கத்தா அணிக்கு எதிராக  210 ரன்கள் என்பது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக அமைந்துள்ளது. 

இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு மும்பை அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் ஹெர்ஷல் கிப்ஸ் இரண்டாவது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் 167 ரன்கள் எடுத்து இருந்தது.

மேலும் ஐபிஎல் தொடரின் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர்களும் விளையாடிய முதல் ஜோடி என்ற சாதனையைம் கே.எல் ராகுல் – டி காக் இணை படைத்துள்ளது.

மேலும் நேற்றைய ஆட்டத்தில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் அடித்ததன் மூலம் டி காக்,  ஐபிஎல் வரலாற்றில் 3ஆவது அதிகபட்ச ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் கிறிஸ் கெய்லின் 175 ரன்களுடன் முதலிடம் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் 158 ரன்களுடன் 2 வது இடத்தில் இடம் பெற்றுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை