PAK vs ZIM: ரிஸ்வான் அதிரடியில் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான், பாபர் அசாம் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 91 ரன்களையும், பாபர் அசாம் 52 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் மதவரே, மருமணி ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியெறினர்.
இதனால் அந்த அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.