சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவர் இலங்கையின் மஹேலா ஜெயவர்தனே. 149 சர்வதேச டெஸ்ட் மற்றும் 448 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 24,400க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.

Advertisement

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ள மஹேலா ஜெயவர்தனே, ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவருகிறார்.

Advertisement

இந்நிலையில், தனது கனவு டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார் மஹேலா ஜெயவர்தனே. இதுதொடர்பாக பேசிய ஜெயவர்தனே, “என்னை பொறுத்தமட்டில் டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தான் மிக முக்கியம். அந்தவகையில் பேட்டிங்கும் ஆடக்கூடிய ஸ்பின்னரான ரஷீத் கான் எனது அணியில் இருப்பார். 7-8ஆம் பேட்டிங் ஆர்டரில் பேட்டிங்கும் ஆடுவார். அவரை வெவ்வேறு வித்தியாசமான சூழல்களில், வெவ்வேறு காம்பினேஷன்களில் பயன்படுத்த முடியும். எனவே அவர் தான் எனது முதல் சாய்ஸ்.

ஓபனிங் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் எனது தேர்வு ”என்று ஜெயவர்தனே கூறினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News