அஸ்வினுக்கு இனி வாய்ப்பு இல்லை - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

Updated: Fri, Jun 24 2022 21:56 IST
Image Source: Google

வீரர்களை வரம்பு மீறி விமர்சனம் செய்ததற்காக சஞ்சய் மஞ்சரேக்கருக்கு கிரிக்கெட் வர்ணனை செய்யும் வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் திருத்திய மாதிரியே தெரியவில்லை. ஜடேஜா எல்லாம் ஒரு கிரிக்கெட் வீரரே இல்லை என்று தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது அவர் பார்வை தமிழக வீரர் அஸ்வின் மீது திரும்பியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியின் வேகப்பந்துவீச்சின் தரம் சிறந்ததாக இருக்கிறது. ஆனால், அதே போல் தான் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா போன்ற அணியிலும் இருக்கிறது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும் சிறப்பாக பந்துவீசினால் போதாது, இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர்களும் சிறந்த பங்களிப்பை தர வேண்டும்.

இந்திய அணி ராகுல் சாஹர், அஸ்வின், வருண் சக்ரவர்த்தியை இனி பரிசீலினை செய்யாது. அவர்களுக்கு பதில் சாஹல், ரவி பிஸ்னாய், குல்தீப், அக்சர் பட்டேல், ஜடேஜா ஆகியோருக்கு தான் இனி வாய்ப்பு கொடுக்கும். நான் விரும்புவது குல்தீப் யாதவும் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும் என்பதே. 

இந்தியா உலக கோப்பை தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு போக வேண்டும் என்றால் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச வேண்டும். டி20 போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் குறைந்தது 3 விக்கெட்டுகளையாவத எடுக்க வேண்டும். அப்போது தான் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். 

இதனால் 3 சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை இந்திய அணி கண்டறிய வேண்டும். அதில் சாஹலின் இடம் உறுதியாகிவிட்டது. குல்தீப் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் மற்ற 2 இடங்களை நிரப்புவார்கள் என நம்புகிறேன்.

இருப்பினும் இந்திய ஆடுகளங்கள் போல் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இருக்காது. இதனால் ஆவேஷ் கான், ஹர்சல் பட்டேல், ஆர்ஷ்தீப் போன்றோரை நாம் பயன்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் பேட்டிற்கு பந்து நன்றாக வரும், பவுன்ஸ் ஆகும். இதனால் ஹர்சல் பட்டேலை விட ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு தருவது சிறந்ததாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை