அபார பந்துவீச்சின் மூலம் புதிய வரலாறு படைத்து மார்கோ ஜான்சன்!
தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதால் டெஸ்ட் போட்டி டர்பனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமும் அத்துடன் கைவிடப்படுவதாக அறிவித்தது.
இதனையடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தில் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி கேப்டன் டெம்பா பவுமா 70 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழ்ந்தனார். இலங்கை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய் அசிதா ஃபெர்னண்டோ மற்றும் லஹிரு குமரா தலா 3 விக்கெட்டுகளும், பிரபாத் ஜெயசூர்யா, விஷ்வா ஃபெர்னண்டோ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொட்ங்கிய இலங்கை அணி தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததுட்ன், 13.5 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு வெறும் 42 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் கமிந்து மெண்டீஸ் 13, லஹிரு குமரா 10 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜான்சன் 7 விக்கெட்டை கைப்பற்றினார்.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொட்ங்கிய தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டெம்பா பவுமா 24 ரன்களுடனும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய மார்கோ ஜான்சன் தனித்துவமான சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார்.
அதன்படி மார்கோ ஜான்சன் இப்போட்டியில் 6.5 ஓவர்களில் (41 பந்துகள்) வெறும் 13 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெடில் குறைந்த பந்துகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை சமன் செய்துள்ளார். முன்னதாக 1904ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஹக் ட்ரம்பிள் 6.5 ஓவரில் 28 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இந்த பட்டியலில், 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 42 பந்துகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதுமட்டுமில்லாமல் தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒரு வேகப்பந்து வீச்சாளரின் மிகச்சிறந்த பந்துவீச்சாகவும் மார்கோ ஜான்சன் சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.