நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றியைப் பதிவுசெய்து 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்ற்து. ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபின் ஆலன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அதிரடியாக தொடங்கிய டிம் செஃபெர்டும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய மார்க் சாப்மேன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய டேரில் மிட்செல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்னிலும், ஜேம்ஸ் நீஷம் 3 ரன்னிலும், மிட்செல் ஹெய் 9 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். இதற்கிடையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த மார்க் சாப்மேன் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 94 ரன்களைச் சேர்த்திருந்த நிலைய்ல் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய கைல் ஜேமிசன், மிட்செல் ஹெய் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, நியூசிலாந்து அணி 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களில் ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி, அப்பாஸ் அஃப்ரிடி மற்றும் அப்ரார் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News