ENG vs IND: காயம் காரணமாக இங்கிலாந்தின் மார்க் வுட் விலகல்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸீல் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது
இதில் பங்கேகும் இரு அணிகளும் தற்போது லீஸ்ட்ஸிற்கு வருகைத் தந்து, தற்போது பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட், இன்றைய நாள் பயிற்சியின் போது தோல் பட்டையில் காயமடைந்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்க்கப்பட்டன.
அதில் அவரது காயம் தீவிரமாக உள்ளதை கண்டறிந்த மருத்துவர்கள், மார்க் வுட் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இந்தியாவுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து மார்க் வுட் விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் காயம் காரணமாக முதல் போட்டியோடு இத்தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.