அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த மேத்யூ பிரீட்ஸ்கி!

Updated: Mon, Feb 10 2025 14:54 IST
Image Source: Google

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களைச் சேர்த்தது. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய மேத்யூ பிரீட்ஸ்கி சதமடித்து அசத்தியதுடன் 150 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் அவர் சில சாதனைகளையும் படைத்துள்ளார். 

அதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் 47 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக கடந்த 1978ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அறிமுக போட்டியில் 148 ரன்களைச் சேர்த்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது மேத்யூ பிரீட்ஸ்கி 150 ரன்களைச் சேர்த்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். 

இதுதவிர்த்து இப்போட்டியில் மேத்யூ பிரீட்ஸ்கி 150 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸின் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 148 ரன்களைச் சேர்த்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது மேத்யூ பிரீட்ஸ்கி முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் 127 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். 

நியூசிலாந்து பிளேயிங் லெவன்: வில் யங், டெவன் கான்வே, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, பென் சியர்ஸ், வில்லியம் ஓரூர்க்.

Also Read: Funding To Save Test Cricket

தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கி, ஜேசன் ஸ்மித், வியான் முல்டர், கைல் வெர்ரெய்ன், மிஹ்லாலி ம்போங்வானா, செனுரான் முத்துசாமி, ஈதன் போஷ், ஜூனியர் தாலா, லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை