Nz vs sa odi: Cricket News & Match Updates
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த மேத்யூ பிரீட்ஸ்கி!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களைச் சேர்த்தது. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய மேத்யூ பிரீட்ஸ்கி சதமடித்து அசத்தியதுடன் 150 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் அவர் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
அதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் 47 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக கடந்த 1978ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அறிமுக போட்டியில் 148 ரன்களைச் சேர்த்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது மேத்யூ பிரீட்ஸ்கி 150 ரன்களைச் சேர்த்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். Read More...
Related Cricket News for Nz vs sa odi - Tesst
Matthew Breetzke ने रचा इतिहास, तोड़ दिया 47 साल पुराना ये World Record; ऐसा करने वाले बने दुनिया के पहले खिलाड़ी
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47