உலகக்கோப்பைகான இந்திய அணியை தேர்வு செய்த மேத்யூ ஹைடன்; சாம்சனுக்கு இடம்!

Updated: Mon, Aug 28 2023 15:23 IST
உலகக்கோப்பைகான இந்திய அணியை தேர்வு செய்த மேத்யூ ஹைடன்; சாம்சனுக்கு இடம்! (Image Source: Google)

உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களது அணி வீரர்களை வரும் 5 ஆம் தேதிக்குள்ளாக தேர்வு செய்தாக வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்திருக்கிறது. உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடர் என்பதால் இந்தியா கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

வரும் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆசிய கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்காக 17 பேர் கொண்ட இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதிலிருந்து தான் உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முன்னாள் வீரர்களும் அணியை தேர்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ ஹைடன் இந்திய அணியில் யாரெல்லாம் இடம் பெற வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து அணியை பட்டியலிட்டுள்ளார். அதன்படி அவரது அணியில், ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் முதல் மூன்று இடங்களில் களமிறங்குவார்கள் என தெரிவித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் போன்ற மிடில் ஆர்டர் பேட்டர்களையும், ஆல் ரவுண்டராக ரவீந்திர ஜடே, ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர் ஆகியோரையும் தேர்ந்தெடுத்துள்ளார். பந்துவீச்சாளர்களில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரும் அவரது அணியில் இடம்பிடித்துள்ளார். 

ஏற்கனவே ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராகத்தான் இடம் பெற்றிருக்கிறார். அப்படியிருக்கும் போது உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மேத்யூ ஹைடன் தனது அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேத்யூ ஹைடன் தேர்வு செய்த இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், கேஎல்  ராகுல், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், அக்‌ஷர் படேல்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை