எனது ஃபார்மை நான் தொடர விரும்புகிறேன் - சஞ்சு சாம்சன்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நேற்று டர்பனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அபாரமான சதத்தின் மூலம், திலக் வர்மாவின் பொறுப்பான ஆட்டத்தின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைச் சேர்த்தது.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 7 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் என 107 ரன்களையும், திலக் வர்மா 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 25 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 23 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 17.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதன்மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்நிலையில் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றது குறித்து பேசிய சஞ்சு சாம்சன், “களத்தில் நான் விளையாடுவதைமிகவும் ரசித்தேன். மேலும் நான் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதுடன, எனது இந்தா ஃபார்மை நான் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் நாங்கள் களத்தில் ஆக்ரோஷமாக இருப்பது குறித்து எப்போது பேசி வருகிறோம்.
Also Read: Funding To Save Test Cricket
அதனால் ஒருமுறை நீங்கள் மூன்று நான்கு பந்துகளை விளையாடினால், அடுத்த பந்தை பவுண்டரி அடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் எதுகுறித்தும், அதிகம் யோசிக்கவில்லை, சில சமயங்களில் அது பலன் தருகிறது, சில சமயங்களில் அது பலனளிக்கவில்லை. ஆனால் இன்று அது நன்றாக வேலை செய்ததில் மகிழ்ச்சி. எந்தவொரு தொடரையும் நீங்கள் இவ்வாறு தொடங்குவது முக்கியது. அதன்படி தொடரை வெற்றியுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.