அவர்களின் ஆட்டத்தை பார்கும் போது ஒரு பந்துவீச்சாளராக மிகவும் கஷ்டமாக உள்ளது - பாட் கம்மின்ஸ்!

Updated: Thu, May 09 2024 13:20 IST
அவர்களின் ஆட்டத்தை பார்கும் போது ஒரு பந்துவீச்சாளராக மிகவும் கஷ்டமாக உள்ளது - பாட் கம்மின்ஸ்! (Image Source: Google)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 55 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 48 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 16 பந்துகளிலும், அபிஷேக் சர்மா 19 பந்துகளிலும் தங்கள் அரைசதத்தைப் பதிவுசெய்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 89 ரன்களையும், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என 75 ரன்களையும் சேர்த்து மிரட்டினர்.

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து மிரட்டியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது 7ஆவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி பிளா ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் வேறு ஏதோ மைதானத்தில் விளையாடுவது போன்று விளையாடினர். அவர்கள் இருவரது ஆட்டத்தையும் பார்த்தால் ஒரு பந்துவீச்சாளராக எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. முதல் 6 ஓவர்களில் இரண்டு பீல்டர்கள் மட்டுமே வெளியில் இருப்பதினால் பந்துவீச்சாளர் பேட்டர்களை தடுத்து நிறுத்துவது கடினமாக உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே டிராவிஸ் ஹெட் இதுபோன்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடினமான பவுண்டரிகளை அடிக்க கடினமான இடங்களை தேர்வு செய்து விளையாடுகிறார். அதேபோல் அபிஷேக் சர்மாவும் சுழற்பந்துவீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சு என இரண்டிற்கு எதிராகவும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது மிகச் சிறப்பாக இருப்பதை பார்க்க முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை