இந்திய டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

Updated: Sun, Sep 29 2024 22:13 IST
Image Source: Google

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது எதிவரும் அக்டோபர் 06ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரானது குவாலியர், டெல்லி மற்றும் ஹைத்ராபாத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த இந்திய அணியில், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேச டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான இந்த அணியில் மெஹிதி ஹசன் மிராஸ் மீண்டும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். இதுதவிர்த்து பர்வேஸ் ஹுசைன், ரகிபுல் ஹசன் ஆகியோரும் மீண்டும் வங்கதேச டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதுதவிர்த்து, தன்ஸித் ஹசன் தமிம், தாவ்ஹித் ஹ்ரிடோய், லிட்டன் தாஸ், முஸ்தஃபிசூர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத், தன்ஸிம் ஹசன், ஜகார் அலி உள்ளிட்ட நட்சத்திர வீர்ர்களுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அந்த அணியின் மூத்த அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசன் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது. 

வங்கதேச டி20 அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தன்ஸித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமன்,  தாவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ், ஜாகர் அலி, மெஹ்தி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், ரிஷாத் ஹுசைன், முஸ்தஃபிசூர் ரஹ்மான், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சீம் ஹசன் சாகிப், ரகிபுல் ஹசன்.

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை