பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!

Updated: Tue, Jan 02 2024 19:46 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக் தொடர் 12 சீசன்களைக் கடந்து 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் - ஜோர்டன் காக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜோர்டன் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த டி காக் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷான் மார்ஷ் 4 ரன்களுக்கும், ஜேக் ஃப்ரெசர், ஹார்வி18 ரன்களிலும், வெல்ஸ் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவிற, 14 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களை மட்டுமே எடுத்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தரப்பில் டேனியல் லாரன்ஸ் 2 விக்கெட்டுகளையும், இமாத் வாசிம், கிளென் மேக்ஸ்வெல், ஜோயல் பாரிஸ் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு டேனியல் லாரன்ஸ் - தாமஸ் ரோஜர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லாரன்ஸ் 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வெப்ஸ்டர் 14 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ரோஜர்ஸுடன் இணைந்த கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தமாஸ் ரோஜர்ஸ் 46 ரன்களையும், கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் 2 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 32 ரன்களைச் சேத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 12.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை