இது எங்களுடைய சிறந்த செயல் திறன் கிடையாது - மார்னஸ் லபுஷாக்னே!

Updated: Fri, Oct 13 2023 12:10 IST
இது எங்களுடைய சிறந்த செயல் திறன் கிடையாது - மார்னஸ் லபுஷாக்னே! (Image Source: Google)

நேற்று ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதற்கு முன்பாக இந்திய அணியிடமும் படுதோல்வி அடைந்திருந்தது. நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டு பெரிய அணிகளிடம் தோற்றுள்ள காரணத்தினால், அடுத்து மீதம் இருக்கிற மூன்று பெரிய அணிகளிடமும் வெல்ல வேண்டிய ஒரு கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளிடம் ஏதாவது எதிர்பாராத தோல்விகள் வரும்பொழுது ரன் ரேட் மோசமாக இருக்கின்ற காரணத்தினால் ஆஸ்திரேலிய அணியால் அரையிறுதிக்கு முன்னேறமுடியாமல் கூட போக வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், தோல்விக்குப் பின் பேசிய மார்னஸ் லபுஷாக்னே, “நாங்கள் எங்கள் செயல் திறன் மற்றும் நிறைய விஷயங்களில் ஏமாற்றம் அடையலாம். உண்மை என்னவென்றால் இதற்காக நாங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் பதுங்கி இருக்க முடியாது. நாங்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் போட்டியை நடத்த வேண்டும். புள்ளிகள் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்று எங்களுக்கு தெரியும். இங்கிருந்து நாங்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். அல்லது நாங்கள் நான்கு இடங்களுக்குள் கடைசிலாவது இருக்க வேண்டும்.

எங்களுக்கு இவ்வளவு பெரிய அழுத்தம் உருவாகி இருப்பதற்கு காரணம் நாங்கள் ஐந்து முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்று இருக்கிறோம் என்பதும், நாங்கள் சரியாக இந்த உலகக் கோப்பை தொடரை ஆரம்பிக்கவில்லை என்பதும்தான் இருக்கிறது. அதே சமயத்தில் நான் இங்கு உட்கார்ந்து சாக்கு சொல்ல வரவில்லை. நாங்கள் ஆஸ்திரேலியாவுக்காக உலகக்கோப்பை விளையாடுகிறோம். எனவே நாங்கள் சிறப்பாக இருந்துதான் ஆகவேண்டும்.

நாங்கள் உலகின் சிறந்த பீல்டிங் அணிகளில் ஒன்று. இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். ஆனால் நேற்று நாங்கள் சரியாக செயல்படவில்லை. நேற்று நாங்கள் வாய்ப்புகளை உருவாக்கினோம். ஆனால் அதை பெறவில்லை. இது எங்களுடைய சிறந்த செயல் திறன் கிடையாது. ஆனால் நாங்கள் இதிலிருந்து மீண்டு வர வேண்டும்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை