காயத்திலிருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பும் டிராவிஸ் ஹெட்!

Updated: Sun, Oct 15 2023 18:50 IST
Image Source: Google

ஐசிசியின் நடப்பு  ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்த ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான போட்டிகளில் படுதோல்வியைச் சந்தித்ததன் மூலம் கடுமையான விமர்சங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் இனிவரும் போட்டிகளில் நிச்சயம் வென்றாக வேண்டிய நிலையில் ஆஸ்திரேலியா இத்தொடரை விளையாடவுள்ளது.

இந்நிலையில் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் காயம் காரணமாக பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காமல் இருப்பது அணிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மற்று தொடக்க வீரராக களமிறங்கி வரும் மிட்செல் மார்ஷின் செயல்பாடுகள் இத்தொடரில் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. 

இதனால் காயத்திலிருந்து மீண்டு வரும் டிராவிஸ் ஹெட் மீண்டும் எப்போது பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கூடிய விரைவில் நான் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவேன் என்று டிராவிஸ் ஹெட் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய டிராவிஸ் ஹெட், நான் நன்றாக குணமடைந்து வருகிறேன். நாங்கள் முதலில் எனது காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அப்படி அறுவரை சிகிச்சை மேற்கொண்டால் என்னால் 10 முதல் 15 வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இருப்பினும் நான் ஆறுவாரங்களுக்குள் விளையாட முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நெதர்லாந்துக்கு எதிரான போட்டிக்கு ஆறுவாரங்கள் இருந்த நிலையில் என்னால் அதற்குள் உடற்தகுதியை நிரூபித்து விளையாட முடியும் என்று நினைத்தேன். நான் நினைத்தது போலவே இப்போது உடற்தகுதியை எட்டி அப்போட்டியில் விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் இன்னும் ஒருசில நாள்களில் நான் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளேன். 

இருப்பினும் என்னால் ஃபீல்டிங் செய்ய முடியுமா என்பது உறுதியாக தெரிவியவில்லை. அதுகுறித்து நான் இன்னும் யோசிக்கவில்லை. எனது ஸ்கேன் முடிவுகளின் அடிப்படையில் நான் விளையாடுவது முடிவுசெய்யப்படும் என நினைக்கிறேன். இருப்பினும் எனது திட்டத்தின் படி கூடிய விரையில் சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.       

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை