எம்எல்சி 2023 எலிமினேட்டர்: வாஷிங்டனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நியூயார்க்!

Updated: Fri, Jul 28 2023 11:41 IST
Image Source: Google

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் - மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய நியூயார்க் அணியில் தொடக்க வீரர்கள் ஜஹாங்கீர் 25, மொனான்க் படேல் 5, நிக்கோலஸ் பூரன் 1 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த டெவால்ட் ப்ரீவிஸ் - டிம் டேவிட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டிம் டேவிட் 23 ரனகள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அதேசமயம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டெவால்ட் ப்ரீவிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 57 ரன்களை எடுத்திருந்த ப்ரீவிஸும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூயார்க் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களைச் சேர்த்தது. 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய வாஷிங்டன் அணியில் மேத்யூ ஷார்ட் 8 ரன்களுக்கும், ஆண்ட்ரிஸ் கஸ் 24 ரன்களுக்கும், முக்தார் அஹ்மத் 19 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 20 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹென்றிக்ஸ், பியோனர், அகீல் ஹொசைன் போன்ற நட்சத்திர வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் எம்ஐ நியூயார்க் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை