ஐபிஎல் விதிகளை மீறியதாக ஹர்திக் பாண்டியா, ஆஷிஷ் நெஹ்ராவுக்கு அபராதம்!

Updated: Wed, May 07 2025 12:51 IST
Image Source: Google

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசாத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 8ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியானது 14 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போட்டியில் ஐபிஎல் விதிகளை மீறியதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ஆஷீஷ் நெஹ்ரா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் கராணமாக அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேற்கொண்டு அந்த அணியின் லெவனில் இடம்பிடித்திருந்த இம்பேக் வீரர், கன்கஷன் சப்டியூட் உள்ளிட்டோருக்கு தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ரியான் பராக், சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல், ரஜத் படிதார் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோருக்கும் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேற்கொண்டு இப்போட்டியில் கள நடுவரின் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷீஷ் நெஹ்ராவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஷீஷ் நெஹ்ராவும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் அபராதத்தை ஏற்றுக்கொண்டதாகவும், அதனால் மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. 

இப்போட்டி குறித்து பெசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் அரைசதம் கடந்துடன் 53 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 35 ரன்களையும், இறுதியில் கார்பின் போஷ் அதிரடியாக விளையாடி 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 

Also Read: LIVE Cricket Score

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 43 ரன்களையும், ஜோஸ் பட்லர் 30 ரன்களையும், ஷெஃபேன் ரூதர்ஃபோர்ட் 28 ரன்களையும் சேர்த்தனர். இறுதியில் ராகுல் திவேத்தியா 11 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தானர். இதன்மூலம் குஜராத் டைட்டான்ஸ் அணியானது கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை