ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!

Updated: Thu, Apr 11 2024 14:24 IST
Image Source: Google

 

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இரு அணிகளுக்கும் சரிவர அமையவில்லை.

இதில் ஆர்சிபி அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அதேசமயம் மறுபக்கம் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி தங்கள் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் கணிப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு சீசனை எதிர்கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து மூன்று தோல்விகளைத் தழுவினாலும், கடைசியா டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெஃபெர்ட் ஆகியோருடன் தற்போது சூர்யகுமார் யாதவும் அணியில் இடம்பிடித்திருந்து அணிக்கு பலத்தை கூட்டியுள்ளது. 

இருப்பினும் இதில் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக தொடங்கினாலும் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடிவதில்லை என்பது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மறுபக்கம் பந்துவீச்சு துறையில் ஜஸ்ப்ரித் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால் ஆகியோர் தொடர்ந்து பேட்டர்களுக்கு தலைவலியை உண்டாக்கி வருகின்றனர். அவர்களுக்கு துணையாக்க ரொமாரியோ ஷெஃபெர்ட், முகமது நபி, பியூஷ் சாவ்லா போன்றோரும் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), திலக் வர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மத்வால்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்தடுத்து போட்டிகளில் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் விராட் கோலியைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் தொடர்ந்து சோபிக்க தவறிவருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நட்சத்திர வீரர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், ராஜத் பட்டிதார் என அனைவரும் தொடர்ந்து சொதப்பி வருவதால் நாளைய போட்டியில் அதிரடி வீரர் வில் ஜேக்ஸ் நிச்சயம் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் ஆர்சிபி அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக நடப்பு சீசனில் இருந்துவருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுவரும் முகமது சிராஜ் இந்த ஐபிஎல் தொடரில் பேட்டர்களை தடுக்க முடியாமல் ரன்களை வாரி வழங்கி வருகிறார். அதேசமயம் கடந்த சில போட்டிகளில் ரீஸ் டாப்லி, யாஷ் தயாள் ஆகியோரது பந்துவீச்சு அணிக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும், வைஷாக் விஜயகுமார், கரண் சர்மா, லோக்கி ஃபர்குசன் போன்ற பந்துவீச்சாளர்களை ஆர்சிபி அணி பயன்படுத்த தவறிவருவது குறிப்பிடத்தக்கது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல்/வில் ஜேக்ஸ், கேமரூன் கிரீன், ரஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக், மயங்க் டாகர், ரீஸ் டாப்லி, முகமது சிராஜ், யாஷ் தயால், வைஷாக் விஜய் குமார்.

 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை