மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ், எலிமினேட்டர் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Fri, Mar 24 2023 11:29 IST
MI-w vs UPW-w WPL Eliminator Dream11 Team: Hayley Matthews or Tahlia McGrath? Check Fantasy Team, C- (Image Source: Google)

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர்ஸ் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கும் முன்னேறின.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2ஆவது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ்
  • இடம் - டிஒய் பாட்டில் மைதானம், நவி மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடரின் ஆரம்பத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியது. இருப்பினும் கடைசி ஒரு சில போட்டிகளில் அந்த அணி சிறு சறுக்கலை சந்தித்து. ஆனால் அதன்பின் ஆர்சிபியை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது.

மும்பை அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஹெய்லி மேத்யூஸ், நாட் ஸ்கைவர், ஹர்மன்ப்ரீத் கவுர், யஷ்திகா பாட்டியா என அதிரடி பேட்டர்களும், பந்துவீச்சில் சைகா இஷாக், பூஜா வஸ்திரெகர், இஸி வாங், அமிலியா கெர் ஆகியோரும் இருப்பது அணிக்கும் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

அந்த அணியின் பேட்டிங்கில் அலிசா ஹீலி, கிரன் நவ்கிரே, தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ் ஆகியோரும், பந்துவீச்சில் தீப்தி சர்மா, சோபி எக்லெஸ்டோன், ராஜேஸ்வரி கெய்க்வாட் ஆகியோரும் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்த இரண்டு லீக் ஆட்டங்களில் முதலாவது ஆட்டத்தில் மும்பை அணியும் (8 விக்கெட் வித்தியாசம்), 2ஆவது ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ் அணியும் (5 விக்கெட்) வெற்றி பெற்றுள்ளன. இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். தோல்வி காணும் அணி போட்டியில் இருந்து வெளியேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ் - ஹெய்லி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹர்மன்பிரீத் கவுர் (கே), அமெலியா கெர், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், ஹுமைரா காசி, ஜிந்திமணி கலிதா, சைகா இஷாக்.

யுபி வாரியர்ஸ் - ஸ்வேதா செஹ்ராவத்/தேவிகா வைத்யா, அலிசா ஹீலி (கே), கிரண் நவ்கிரே, தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், தீப்தி ஷர்மா, சோஃபி எக்லெஸ்டோன், சிம்ரன் ஷேக், பார்ஷவி சோப்ரா, அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயக்வாட்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - அலிசா ஹீலி, யாஸ்திகா பாட்டியா
  • பேட்டர்ஸ் – ஹர்மன்பிரீத் கவுர்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹெய்லி மேத்யூஸ், நாட் ஸ்கைவர், சோஃபி எக்லெஸ்டோன், அமெலியா கெர், தஹ்லியா மெக்ராத், தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரிஸ்
  • பந்து வீச்சாளர்கள் - சைகா இஷாக்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை