கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் மைக்கேல் ஹோல்டிங்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங். இவர் 1975 முதல் 1987 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 60 டெஸ்ட், 102 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 391 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
அதன்பிறகு கிரிக்கெட் வர்ணையாளராக ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் 20 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றினார். வெளிப்படையான கருத்துகளாலும் இன, நிற வேறுபாடுகளுக்கு எதிரான தன்னுடைய வலுவான நிலைப்பாடுகளுக்காகவும் ரசிகர்கள் மத்தியில் அவருடைய வர்ணனைக்கு எப்போதும் ஆதரவும் இருக்கும்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெறுவதாக ஹோல்டிங் இன்று அறிவித்துள்ளார். ஹோல்டிங்கின் ஓய்வு பற்றி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் கூறியதாவது, “கிரிக்கெட் வர்ணனையில் அற்புதமான வாழ்க்கை அமைந்ததற்கு வாழ்த்துகள். உலகம் முழுக்க உங்கள் குரலை பல லட்சம் ரசிகர்கள் மிஸ் செய்வார்கள். நீங்கள் அளித்த வெளிப்படையான, நடுநிலைமையான கருத்துகள் எனக்குப் பிடிக்கும். உடல்நலத்தைக் கவனித்துக்கொண்டு உங்கள் ஓய்வு வாழ்க்கையை அனுபவியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.