மீண்டும் மிக்கி ஆர்த்தரை வம்பிழுத்த மைக்கேல் வாகன்!
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அஹ்மதாபாத்தில் நடைபெற்றது. அங்கே பாகிஸ்தான் அணிக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. மைதானத்தில் தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவான பாடல்கள் ஒலித்தது. இடையே ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் எழுப்பி பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிர்ப்பை காட்டினர்.
ரசிகர்கள் இப்படி நடந்து கொண்டது சரியல்ல என்றாலும், பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பின் இதையெல்லாம் சுட்டிக் காட்டி இருந்தது சர்ச்சையானது. அது மட்டுமின்றி மைதானத்தில் "தில் தில் பாகிஸ்தான்" பாடல் ஒலிக்கவில்லை. அது பாகிஸ்தான் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பாடல் என கூறி இருந்தார் மிக்கி ஆர்தர். அதை பலரும் அப்போதே கிண்டல் செய்தனர். அந்த பாடல் ஒலிக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அணி ஜெயிக்காதா? என கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலியா அணியிடமும், ஆஃப்கானிஸ்தான் அணியிடமும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில்ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி சென்னையில் நடந்தது. அதைக் குறிப்பிட்டு, "சென்னையில் நேற்று தில் தில் பாகிஸ்தான் பாடல் போடவில்லை என நினைக்கிறேன்" என பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு அதுதான் காரணம் என்பது போல கிண்டல் செய்துள்ளார் மைக்கேல் வாகன்.