சிபிஎல் 2021: முதல்முறையாக பயன்படுத்தப்பட்ட ‘மைக்ரோ சிப்’ ஸ்மார்ட் பந்து!
வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்று கோலகலமாக தொடங்கியது.
இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும், கயானா அமேசன் வாரியர்ஸ் அணியும் விளையாடின.
இப்போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக‘ஸ்மார்ட் பந்து’ என்றழைக்கப்படும் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட பந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் பந்தின் மூலம், பந்துவீசும் வேகம், அதன்மீது கொடுக்கப்படும் அழத்தம், பந்து ஸ்பின் ஆகும் விதம் ஆகியவற்றை நெடி நேரத்தில் கனிணி திரையில் பார்க்கலாம். இப்பந்தினை புகழ்பெற்ற கிரிக்கெட் பந்து தயாரிக்கும் நிறுவனமான கூக்கபுரா, ஸ்போர்ட்கோர் எனும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
மேலும் மற்ற கிரிக்கெட் பந்துகளுடைய தன்மையே இப்பதிலும் இருப்பதாகவும், கூடுதலாக மைக்ரோ சிப் மட்டுமே இப்பந்தில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூக்கபுரா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் இப்பந்து நினைத்தைப் போலவே சிறப்பான முடிவுகளை தந்துள்ளதாகவும், இது வருங்கால கிரிக்கெட்டில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூக்கபுரா தெரிவித்துள்ளது.