எஸ்ஏ20 2024: மும்பை இந்தியன்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, Jan 29 2024 14:46 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் கீரென் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. ஏற்கெனவே இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்
  • இடம் - நியூலேண்ட்ஸ், கேப்டவுன்
  • நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் நியூலேண்ட்ஸ் ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இதனால் இங்கு  பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர் இடையே பெரிய போட்டியை எதிர்பார்க்கலாம். மேலும் இங்கு முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சராசரியாக 175 ரன்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேரலை

இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் - 02
  • ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - 01

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்: ரியான் ரிக்கெல்டன், ரஸ்ஸி வேன்டெர் டுசென், டெவால்ட் ப்ரீவிஸ், கானர் எஸ்டெர்ஹூய்சன், லியாம் லிவிங்ஸ்டோன், கீரன் பொல்லார்ட் (கே), சாம் கரன், ஜார்ஜ் லிண்டே, தாமஸ் கேபர், காகிசோ ரபாடா, ஒல்லி ஸ்டோன்

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), லியுஸ் டு ப்ளூய், சிபோனெலோ மகன்யா, மொயீன் அலி, டொனோவன் ஃபெரீரா, ரொமாரியோ ஷெப்ஃபர்ட், கைல் சிம்மன்ட்ஸ், லிசாத் வில்லியம்ஸ், நந்த்ரே பர்கர், இம்ரான் தாஹிர்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ரியான் ரிக்கெல்டன்(துணைக்கேப்டன்) 
  • பேட்டர்ஸ்: கீரன் பொல்லார்ட், ரஸ்ஸி வேன்டெர் டுசென், ரீசா ஹென்ட்ரிக்ஸ்(கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: சாம் கரன், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஜார்ஜ் லிண்டே
  • பந்து வீச்சாளர்: ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை