டி20 பிளாஸ்ட்: இமாலய இலக்கை அசால்ட்டாக எட்டி மிடில்செக்ஸ் சாதனை!

Updated: Fri, Jun 23 2023 10:54 IST
Middlesex pull of the highest successful chase in Vitality Blast history! (Image Source: Google)

இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்திசௌத் குரூப்பில் இடம்பெற்றிருந்த சர்ரே, மிடில்செஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மிடில்செஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய சர்ரே அணியில் ஓபனர்கள் வில் ஜாக்ஸ், லூரி இவான்ஸ் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார்கள். இவர்களது அதிரடியை எந்த பௌலராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த பார்ட்னர்ஷிப் 12 ஓவர்களில் 145/0 ரன்களை குவித்து அசத்தியது. குறிப்பாக, லுகே ஹால்மேன் வீசிய 11ஆவது ஓவரில் வில் ஜாக்ஸ் தொடர்ந்து 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.

இந்நிலையில், 12.4ஆவது ஓவரில் இவான்ஸ் 85 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் ஜேக்ஸ் 8 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசி 96 ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் ஓரளவு ரன்களைச் சேர்க்க, சர்ரே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு252 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தது.

இதையடுத்து இமாலய இலக்கை துரத்திக் களமிறங்கிய மிடில்செஸ் அணியும் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினர். அந்த அணி சிக்ஸர்களை அடிப்பதற்கு பதிலாக, அதிகமாக பவுண்டரிகளை விளாசி ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள். தொடக்க வீரர்கள் ஸ்டீவ் எஸ்கினாஸி 39 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 73 ரன்களை குவித்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் கிராக்னில் 16 பந்துகளில் 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தப் பிறகு மேக்ஸ் ஹோல்டன் 68, ரியான் ஹிஜின்ஸ் 48 ஆகியோர் தொடர்ந்து காட்டடி அடித்து, அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றனர். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜாக் டேவிஸ் 11 ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து, அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.

இதன்மூலம், மிடில்செஸ் அணி 19.2 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. டி20 கிரிக்கெட் வரலாற்றில், இரண்டாவது மிகப்பெரிய ரன் சேஸாக இது இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை