பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது. பின்னர் தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வங்கதேச அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 274 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

Advertisement

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி அணியில் லிட்டன் தாஸ் சதமடித்தும், மெஹிதி ஹசன் அரைசதம் கடந்தும் அசத்த அந்த அணி 262 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து 12 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியானது 172 ரன்னில் சுருண்டது. மேலும் அந்த அணி இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 184 ரன்கள் முன்னிலை பெற்றிந்ததால் வங்கதேச அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடி வரும் வங்கதேச அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய 5ஆம் நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தரப்பில் ஜாகிர் ஹசன் 31 ரன்களையும், சாத்மான் இஸ்லாம் 9 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ஜாகிர் ஹசன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தி வந்தார்.

இதன்மூலம் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜாகிர் ஹசன் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் வங்கதேச அணியானது தற்போது வரை 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களைச் சேர்த்துள்ளது. மேற்கொண்டு அந்த அணி 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ஜாகிர் ஹசன் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் மிர் ஹம்ஸா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அந்தவகையில் இன்னிங்ஸின் 12ஆவது ஓவரை மிர் ஹம்ஸா வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஜாகிர் ஹசன் க்ளீன் போல்டானார். இந்நிலையில் மிர் ஹம்ஸா பந்துவீச்சு குறித்த காணொளியானது தற்சமயம் இணைத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News