இந்தியா குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட போல்ட்!

Updated: Sun, May 09 2021 20:12 IST
Image Source: Google

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் 4 லட்சம் பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். 

தொடர்ந்த கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது வீடுகளுக்கும் நாடுகளுக்கும் திரும்பியுள்ளனர். இன்றைய தினம் ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் தங்களது நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் தற்போதைய நிலை மாறி இயல்புநிலை திரும்பும் என்று நியூசிலாந்து வேகப்புயல் ட்ரெண்ட் போல்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் இன்றைய தினம் ஆக்லாந்திற்கு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள போல்ட், “இந்தியா மற்றும் அதன் ரசிகர்கள் தனக்கு ஒரு மனிதனாகவும் கிரிக்கெட் வீரராகவும் எல்லாவற்றையும் கொடுத்துள்ளனர்.

இந்திய ரசிகர்களிடம் இருந்து எப்போதும் தனக்கு கிடைக்கும் ஆதரவு பாராட்டுக்குரியது. இந்தியாவின் நெருக்கடியான இந்த சூழல் விரைவில் மாறும். தான் இந்த அழகான நாட்டிற்கு மீண்டும் திரும்பி வருவேன்.

ஐபிஎல்லின் போது ஒவ்வொரு வீரரின் பாதுகாப்பு மற்றும் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் தங்களை சிறப்பாக பார்த்துக் கொள்ளவும் மற்றவருக்கு ஆதரவாக செயல்படவும் வலிமையாக இருக்கவும்” என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை