டி20 உலகக்கோப்பஒ: 14 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த மிஸ்பா உல் ஹக்!

Updated: Sat, Jan 29 2022 12:30 IST
Misbah-ul-Haq still rues missing the scoop in the T20 WC 2007 final against India (Image Source: Google)

கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் முதல்முறையாக ஐசிசி, டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தியது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற அந்த முக்கியமான இறுதிப் போட்டியில் இந்திய அணி இறுதியாக 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்று முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

14 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த போட்டியில் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி அந்த தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் முக்கியமான அந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு தலைவலியை கொடுத்தார்.

அதிலும் குறிப்பாக கடைசி கட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு மிக அருகில் வந்தது என்றே கூறலாம். ஏனெனில் கடைசி ஓவரின் போது சில பந்துகள் எஞ்சியிருந்த வேளையில் 6 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் மிஸ்பா உல் ஹக் களத்தில் இருந்ததால் நிச்சயம் மீதமிருந்த பந்துகளில் ஒரு சிக்சரை விளாசுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அப்போது ஜொஹிந்தர் சர்மா வீசிய பந்தில் ஸ்கூப் ஷாட் விளையாடி ஸ்ரீசாந்த் கையில் கேட்ச் ஆகி மிஸ்பா ஆட்டமிழந்தார். அதோடு இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் 38 பந்துகளை சந்தித்த அவர் 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுத்து கடைசி வீரராக அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அப்படி தான் எதிர்கொண்ட அந்த பந்தை ஹூக் ஷாட் விளையாட என்ன காரணம் என்பது குறித்து தற்போது 14 ஆண்டுகள் கழித்து மிஸ்பா உல் ஹக் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நான் எப்போதுமே என்னுடைய பேட்டிங்கில் நிறைய நம்பிக்கை வைத்திருந்தேன். குறிப்பாக அந்த தொடரில் ஸ்கூப் ஷாட் ஆடுவதில் சிறப்பாக செயல்பட்டு வந்தேன். அதோடு அந்த ஸ்கூப் ஷாட் மூலம் எனக்கு நிறைய பவுண்டரிகளும் அப்போது கிடைத்தன. 

எனவே இறுதியாக நான் அந்த ஷாட்டை அட முடிவு செய்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக அது விக்கெட்டாக அமைந்தது. அதீத நம்பிக்கையுடன்தான் அந்த ஷாட்டை தவறாக அடித்து விட்டேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை