சூர்யகுமார், ஹாரிஸ் ராவுஃப், ஃபர்ஹான் மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி!

Updated: Fri, Sep 26 2025 20:30 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 17அவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறியுள்ளன. இதையடுத்டு இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி எதிர்வரும் 28ஆம் தேதி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்வுள்ளது. 

இந்த நிலையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகளில் சார்ச்சைகள் வெடித்தன. இதில் லீக் போட்டியின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் கைக்குலுக்குவதை தவிர்த்தனர். அதனைத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்றின் போது பாகிஸ்தான் வீரர்கள் சாஹிப்சாதா ஃபர்ஹான், ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் சைகையின் மூலம் ரசிகர்களை சீண்டினர்.

இதனையடுத்து சாஹிப்சாதா ஃபர்ஹான், ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் குறித்து ஐசிசியிடம் பிசிசிஐ புகாரளித்தது. அதேசமயம் சூர்யகுமார் யாதவ் அரசியல் நோக்குடன் கருத்து தெரிவித்ததாக கூற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் புகாரளித்தது. இதனையடுத்து நேற்றைய தினம் சூர்யகுமார் யாதவும், இன்று சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோரும் ஐசிசி விசாரணையை எதிர்கொண்டனர். 

இந்த விசாரணையின் முடிவில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹானுக்கு அபராதத்துடன், கரும்புள்ளியும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read: LIVE Cricket Score

இருப்பினும் எந்த வீரருக்கும் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் வார்த்தை மோதலில் ஈடுபடுவதை குறைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஒருவேளை வீரர்கள் மீண்டும் அதே தவறை செய்யும் பட்டத்தில் அவர்களுக்கு தடை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை