உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸி - பாக் அணிகள் மோதும் - மிட்செல் மார்ஷ்!

Updated: Sat, Sep 09 2023 12:25 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்து இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.தற்பொழுது தென் ஆப்பிரிக்க நாட்டுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

தற்போதைய ஆஸ்திரேலியாவின் இந்த தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற டி20 தொடரில் டேவிட் வார்னர் கிடைக்கவில்லை. தற்பொழுது ஒருநாள் தொடரில் விளையாடுகிறார். மேலும் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரர்களான கேப்டன் பேட் கம்மின்ஸ், ஸ்டீவன் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல் மற்றும் மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி உடனான ஒருநாள் தொடரில் உடல் தகுதியை எட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். பெரும்பாலானவர்களின் கருத்துக்கணிப்பில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகள் முக்கிய இடங்களை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் தற்பொழுது தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் வெள்ளைப்பந்து இரண்டு தொடர்களுக்கும் கேப்டனாக செயல்பட்டு வரும் மிட்சல் மார்ஸ் இடம் உலகக் கோப்பையை வெல்லும் அணியாக யார் இருப்பார்கள்? என்ற கேள்வியை இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வைத்தார்.

இதற்கு மிட்சல் மார்ஷ் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாடும் என்று தெரிவித்தார். அதற்கு மைக்கேல் வாகன் நிச்சயமாக நீங்கள் இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். அவர்கள் இதற்கு கோபப்படுவார்கள் என்று கூறினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய மிட்சல் மார்ஸ், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உலகக் கோப்பை போட்டியை பற்றி ஒருவர் என்னிடம் கேட்டார். ஆஸ்திரேலியா 370 ரன்கள் அடிக்கும் இந்தியா 65 ரன்கள் ஆல்அவுட் ஆகும் என்று கூறினேன். ஆஸ்திரேலிய இந்திய அணிக்கு இடையேயான போட்டி குறித்தான எனது நகைச்சுவையை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டார்கள்” என்று பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்து கூறி இருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை