சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த மிட்செல் ஓவன்

Updated: Mon, Jul 21 2025 12:12 IST
Image Source: Google

Mitchell Owen Record: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அறிமுக டி20 போட்டியில் அரைசதம் அடித்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்று ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் ஓவன் சில சாதனைகளைப் படைத்துள்ளர். 

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜமைக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோஸ்டன் சேஸ் 60 ரன்களையும், ஷாய் ஹோப் 55 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 38 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 4 விகெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்பின் இலக்கை நோக்கி  விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் கேமரூன் க்ரீன் 51 ரன்களையும், அறிமுக வீரர் மிட்செல் ஓவன் 50 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் மிட்செல் ஓவன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அறிமுக வீரர் மிட்செல் ஓவன் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுக போட்டியில் அரைசதம் கடந்த மூன்றாவது வீரர் எனும் பெருமையை மிட்செல் ஓவன் பெற்றுள்ளார். இதற்கு முன் அந்த அணியின் முன்னாள் வீரர்கள் ரிக்கி பாண்டிங் மாற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

இதுதவிர்த்து இப்போட்டியில் மிட்செல் ஓவன் ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுக போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற நான்காவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன் அந்த அணி முன்னாள் வீரர்கள் ரிக்கி பண்டிங், கேமரூன் வைட் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் மட்டுமே அறிமுக போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்று சாதனை படைத்துள்ளார். 

இது மட்டுமல்லாமல், மிட்செல் ஓவன் தனது இன்னிங்ஸில் 6 சிக்ஸர்களையும் அடித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகப் போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக காடந்த 2009 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அறிமுக போட்டியில் டேவிட் வார்னர் 6 சிக்ஸர்களை விளாசியதே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது மிட்செல் ஓவன் சமன்செய்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

அறிமுகப் போட்டியில் அதிக சிக்ஸர்கள் (முழு உறுப்பினர்கள்)

  • 6 - மிட்செல் ஓவன் vs வெஸ்ட் இண்டீஸ், கிங்ஸ்டன், 2025
  • 6 - டேவிட் வார்னர் vs தென் ஆப்பிரிக்கா, மெல்போர்ன், 2009
  • 5 - ரிக்கி பாண்டிங் vs நியூசிலாந்து, ஆக்லாந்து, 2005
  • 5 - ஜெஹான் முபாரக் vs கென்யா, ஜோஹன்னஸ்பர்க், 2007
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை