டி20 உலகக்கோப்பை: காயத்திலிருந்து மீண்டார் நியூசிலாந்து நட்சத்திரம்!

Updated: Mon, Oct 10 2022 10:49 IST
Image Source: Google

நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இத்தொடரின் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேரில் மிட்செல் விரலில் பந்து பட்டு அதன் காரணமாக எலும்புமுறிவு ஏற்பட்டது. 

இதையடுத்து முத்தரப்பு டி20 தொடரிலிருந்து டேரில் மிட்செல் விலகினார். மேலும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் பங்கேற்பாரா மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

ஏனேனில் கடந்த 2021 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 72 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 சதங்களுடன் 538 ரன்கள் எடுத்தார். 

மேலும் கடந்த 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு விளையாடிய 13 இன்னிங்ஸில் 301 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் - 144.71. நியூசிலாந்து அணியின் முக்கிய வீரராக டேரில் மிட்செல் உள்ளதால் அவர் விரைவில் குணமாகி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கவேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில் அனைவரது எதிர்பார்ப்புக்கு ஏற்றவாரு டேரில் மிட்செல் காயத்தில் இருந்து மீண்டுள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனாலும் அவருக்கு போதிய ஓய்வு தேவை என்பதால், டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியிலிருந்து அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 உலகக் கோப்பைப் தொடரில் அக்டோபர் 22 அன்று ஆஸ்திரேலியாவை கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போட்டியில் டேரில் மிட்செல் விளையாடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை