எம்எல்சி 2023: 50 ரன்களுக்கு சுருண்ட நைட் ரைடர்ஸ்; நியூயார்க் அபார வெற்றி! 

Updated: Mon, Jul 17 2023 12:43 IST
எம்எல்சி 2023: 50 ரன்களுக்கு சுருண்ட நைட் ரைடர்ஸ்; நியூயார்க் அபார வெற்றி!  (Image Source: Google)

அமெரிக்காவில் ஆறு அணிகளை வைத்து மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியும் பலப்பரீட்சை நடத்தின. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் கேப்டன் கீரன் பொல்லார்ட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. டாப் ஆர்டர் வீரர்கள் டெவால்ட் ப்ரீவிஸ், ஜஹாங்கீர்,மொனான்க் படேல், அசாம், கேப்டன் பொல்லார்ட் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். 

இருப்பினும், நிக்கோலஸ் பூரன் 37 பந்தில் 38 ரன், டிம் டேவிட் 21 பந்தில் நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 48 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன் நியூயார்க் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. எல்கேஆர் அணி தரப்பில் அலி கான், கோர்ன் டிரை, ஆடம் ஸாம்பா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்க வீரர் உன்முகுன்த் சந்த் மட்டுமே ஒரு சிக்சர் இரண்டு பவுண்டரிகள் என 26 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். மற்ற யாருமே இரட்டை இலக்க ரன்களை தொடவில்லை. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் மார்ட்டின் கப்தில், ரைலி ரூசோவ், ஆண்ட்ரே ரஸல் மற்றும் கேப்டன் சுனில் நரைன் என எல்லோரும் ஒட்டுமொத்தமாக பேட்டிங்கில் ஏமாற்றினார்கள். 

இதன் காரணமாக எல்கேஆர் அணி 13.5 ஓவரில் 50 ரன்களுக்கு சுருண்டு அதிர்ச்சி அளித்தது. நியூயார்க் அணி தரப்பில் பந்து வீசிய ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார்கள். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை