ஆசிய கோப்பை 2022: ஷாஹினுக்கு மாற்றாக இளம் வீரருக்கு வாய்ப்பு!

Updated: Mon, Aug 22 2022 15:18 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடக்கிறது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் நடக்கிறது. இந்த தொடரில் 3 முறை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணி. அந்த தோல்விக்கு ஆசிய கோப்பையில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. 

கடந்த டி20 உலக கோப்பையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித், ராகுல், கோலி ஆகியோரை விரைவில் வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய வைத்தவர் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி. 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது முழங்காலில் காயமடைந்த ஷாஹீன் அஃப்ரிடி, அதற்காக சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது பாகிஸ்தான் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் நிலையில், அங்கு பாகிஸ்தான் அணியுடன் இருந்து ஃபிசியோதெரபிஸ்ட் மற்றும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவருகிறார் ஷாஹீன் அஃப்ரிடி. 

அவர் 5-6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதால், ஆசிய கோப்பை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றிலிருந்து விலகியுள்ளார். பாகிஸ்தான் அணியின் மேட்ச் வின்னிங் பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி ஆசிய கோப்பை தொடரில் விளையாடாதது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும். அதேசமயம் இந்திய அணிக்கு இது சாதகமாக அமையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவருக்கு மாற்றுவீரராக இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஹஸ்னைன் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹஸ்னைன் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை