அதிரடியில் அசத்தி வரும் ரிஸ்வான் படைத்த புதிய உலக சாதனை!

Updated: Sun, Aug 01 2021 16:49 IST
Image Source: Google

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. 

இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். 

இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு காலெண்டர் ஆண்டில் அதிக ரன்களைச் சேர்த்த முதல் வீரர் எனும் சாதனையை முகமது ரிஸ்வான் நேற்றைய போட்டியின் மூலம் படைத்துள்ளார். 

இந்த ஓராண்டில் 15 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஸ்வான் 94 சராசரியுடன், 752 ரன்களைச் சேர்த்து இச்சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங் 20 போட்டிகளில் 746 ரன்களைச் சேர்த்ததே, சர்வதேச டி20 போட்டிகளில் ஓராண்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இருந்தது. 

ஆனால் இதனைத் தற்போது முகமது ரிஸ்வான் 15 போட்டிகளிலேயே முறியடித்து சாதனைப் படைத்துள்ளார். மேலும் இவர் இச்சதானையை படைக்க 7 அரைசதம் மற்றும் ஒரு சதத்தையும் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை