உலகக்கோப்பையை வெல்வதே எங்களது இலக்கு - முகமது ரிஸ்வான்!

Updated: Mon, Jun 19 2023 20:03 IST
Image Source: Google

ஐசிசி நடத்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது . இதற்கான அட்டவணை வெகு விரைவிலேயே வெளியிடப்படும் என தெரிகிறது . 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விரைவிலேயே ஒருநாள் உலகக் கோப்பை காண அட்டவணையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது .

உலகக்கோப்பை 2023 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் அட்டவணை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் அதற்கான முன்மாதிரி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டு இருந்தது . அந்த அட்டவணையின் படி உலகமே எதிர்நோக்கி கொண்டிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வருகின்ற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது .

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் இந்த போட்டியின் மீது தான் இருக்கிறது . கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் வீரர்கள் இப்போதே இந்த போட்டி பற்றிய கணிப்பை கணிக்க தொடங்கிவிட்டனர் . முன்னாள் வீரர்கள் பலரும் இந்த போட்டி தொடர்பாக தங்களது கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகின்றனர் . இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் முகமது ரிஸ்வான் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் .

இதுகுறித்து பேசிய அவர், “உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வெல்வது மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல . அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்களது ஒற்றை இலக்காக இருக்கிறது. நிச்சயமாக இந்த முறை உலக கோப்பையை வெல்ல முயற்சிகள் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு முன்பாக ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியதே இல்லை . முதல்முறையாக துபாயில் வைத்து நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியில் தான் பாகிஸ்தான் அணி இந்தியாவை பத்தி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது . 

அதன் பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பையில் இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்று உலகக் கோப்பையில் தனது ஆதிக்கத்தை செலுத்தியது . இதனால் இந்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது .

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை