மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது ரிஸ்வான்!

Updated: Mon, Sep 05 2022 19:15 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன.

சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. துபாயில் நேற்று நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின்போது முதல் இன்னிங்ஸில் விக்கெட் கீப்பிங் செய்தபோது பாகிஸ்தான் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வானுக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் 2ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தார். 

அதிலும் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ரிஸ்வான் 51 பந்தில் 71 ரன்களை குவித்து பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்த போட்டி முடிந்தபின் ரிஸ்வான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது காலில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. 

ரிஸ்வானின் காயம் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமையும். ரிஸ்வானால் அடுத்துவரும் போட்டிகளில் காயம் காரணமாக ஆடமுடியாமல் போனால், அது மிகப்பெரும் பாதிப்பாக பாகிஸ்தானுக்கு அமையும். லீக் சுற்றில் இந்தியாவிற்கு எதிராக 43 ரன்களும், ஹாங்காங்கிற்கு எதிராக 78 ரன்களும் ரிஸ்வான் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை