அணி நிர்வாக முடிவு குறித்து ரொம்ப சிந்திக்கக்கூடாது - முகமது ஷமி
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகரித்து வரும் இத்தொடரில் பல சர்ச்சையான விசயங்களும் அரங்கேறி வருகின்றன.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இத்தொடரில் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படாமல் இருப்பது பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் அஸ்வின் அணியில் களமிறக்கப்படாதது குறித்து பதிலளித்த ஷமி, “அணி தேர்வு குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. அது அணி நிர்வாகத்தின் முடிவு. களத்தில் ஆடும் 11 வீரர்கள் தான் அணியின் வெற்றிக்காக அவர்களது கடமையை செய்ய வேண்டும்.
அணி நிர்வாகம் தேர்வு செய்து களத்தில் இறக்கிவிட்ட 11 வீரர்கள் மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம். எனவே அணி தேர்வு குறித்தெல்லாம் ரொம்ப சிந்திக்கக்கூடாது” என்று தெரிவித்தார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
முகமது ஷமியின் இந்த பதில் கிரிக்கெட் மற்றும் அஸ்வின் ரசிகர்களை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது.