முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்காதது மிகப்பெரும் தவறு - கிரன் மோர்!
ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.
அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், தீபக் ஹூடா, சாஹல், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது சரியானது தான் என்றாலும், சீனியர் வீரரான முகமது ஷமிக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவு சமூக வலைதளங்களில் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என ஓபனாக பேசி வருகின்றனர், அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்தான தங்களது கருத்துக்களையும்க் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரன் மோர், முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என ஓபனாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிரன் மோர் பேசுகையில், “முகமது ஷமி எடுக்கப்படாதது என்னை பொறுத்தவரையில் தவறான முடிவு. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிச்சயம் ஒரு மாற்று வீரர் தேவை, மாற்று வீரர்கள் இல்லாமல் ஆசிய கோப்பை தொடரில் வேண்டுமானால் இந்திய அணியால் சமாளிக்க முடியும், ஆனால் டி.20 உலகக்கோப்பையில் அது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்.
எனவே டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலாவது முகமது ஷமிக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும், அதுவே இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும். பும்ராஹ்விற்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறித்து எனக்கு தெரியவில்லை, பும்ரா டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் முழு உடற்தகுதியை பெற்றுவிட்டால், பும்ராவுடன் முகமது ஷமியும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஸ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான்.
கூடுதல் வீரர்கள்: ஸ்ரேயஸ் ஐயர், அக்ஷர் பட்டேல், தீபக் சாஹர்